வங்கதேசத்துக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நடவடிக்கை.


வங்கதேசத்துக்கு இயக்கப்படும் விமான சேவைகளை உடனடியாக நிறுத்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் இயக்க திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேச நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், முன்பதிவு பயணிகளின் கட்டணம் திரும்பி அளிக்கப்படும் அல்லது பயணத் தேதி மாற்ற அனுமதிக்கப்படும் என்று எக்ஸ் தளத்தில் ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இடஒதுக்கீடுக்கு எதிராக வங்கதேசத்தில் வெடித்த மாணவர்களின் வன்முறையால் 300 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதாக ராணுவ தளபதி அறிவித்ததை அடுத்து பதற்றம் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...