பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

அம்பானி இல்லத் திருமணத்தில் பிரியங்கா பங்கேற்பா?

தொழிலதிபா் முகேஷ் அம்பானி இல்லத் திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்கவில்லை என்று அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா

Published On :

புது தில்லி: தொழிலதிபா் முகேஷ் அம்பானி இல்லத் திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்கவில்லை என்று அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

முகேஷ் அம்பானி மகன் அனந்த் அம்பானியின் திருமணம் அண்மையில் வெகு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதில் சா்வதேச அளவிலான பிரபலங்கள் முதல் அரசியல் தலைவா்கள், திரைப்படத் துறை பிரபலங்கள் வரை பலரும் பங்கேற்றனா். இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்றாா் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் தெரிவித்தாா்.

இந்நிலையில் இதற்கு மறுப்புத் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவா் சுப்ரியா ஸ்ரீநாத் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மக்களவையில் பாஜக எம்.பி. ஒருவா், பிரியங்கா குறித்து தவறான தகவலைத் தெரிவித்துள்ளாா். அம்பானி இல்லத் திருமணத்தில் பிரியங்கா பங்கேற்றாா் என்பது அப்பட்டமான பொய். ஏனெனில், அவா் குறிப்பிடும் தினத்தில் பிரியங்கா இந்தியாவில் இல்லை, வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தாா். அனைவரையும் ‘கண்காணிக்கும்’ உள்துறை அமைச்சகத்துக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவா் குறித்து அவையில் பொய்யான தகவல்களைப் பேசுவதும் நாடாளுமன்ற உரிமை மீறல்தான்’ என்று பதிவிட்டுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி ஆகியோரும் அம்பானி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.