போட்டியை வரவேற்கிறோம்!! மஸ்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு ரிலையன்ஸ் பதிலடி!!!
ஜியோ உள்பட ஒவ்வொரு நிறுவனமும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், போட்டிக்கு ஒருபோதும் அஞ்சியதில்லை.

ரிலையன்ஸ் குழுமம்
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, ஸ்டார்லிங்க் இந்தியாவிற்குள் நுழைவைவதைத் தடுத்துவிட்டதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு நிறுவனமும் நாட்டின் சட்டங்களையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்றது.
அக்டோபர் 7 தேதியன்று, மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க், இந்தியாவிற்குத் தேவை என்று கூறிய ஒரு எக்ஸ் பயனரின் பதிவிற்கு பதிலளித்த மஸ்க், இந்திய மக்கள் மீதான தங்கள் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சில பெரும் பணக்காரர்களால் அது தடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மற்றொரு எக்ஸ் பதிவில், மஸ்க் அம்பானியின் பெயரைக் குறிப்பிட்டு, ஸ்டார்லிங்க் இந்திய சந்தையில் நுழைய அவர் அனுமதிப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.
இந்திய தொழிலதிபரை பிரதமர் அம்பானி என்று குறிப்பிட்ட மஸ்க், நீங்கள் தான் இந்தியாவின் உண்மையான முதலாளி என்பதை உணராததற்கு எனது பணிவான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்திய மக்களை நீங்கள் உங்கள் ஏகபோக சுரண்டலில் வைத்திருக்கவே விரும்புவீர்கள், ஆனாலும் ஸ்டார்லிங்க் போட்டியிட அனுமதிப்பதை பரிசீலிப்பீர்களா?
இதற்குப் பதிலளித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தங்களது செயற்கைக்கோள் சேவையை, இந்திய அரசு அனுமதிகளுக்காகக் காத்திருப்பதாகக் தெரிவித்தது.
சட்டத்தின் கீழ், இந்தியர் அல்லது வெளிநாட்டவர் என வேறுபாடின்றி, அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். ஸ்டார்லிங்க் உள்பட செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளில் போட்டியை நாங்கள் வரவேற்கிறோம். ஜியோ உள்பட ஒவ்வொரு நிறுவனமும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்', போட்டிக்கு ஒருபோதும் அஞ்சியதில்லை என்றது.
ஜியோ நிறுவனம், ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல், 2016ல் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு புதிய நிறுவனமாக நுழைந்தது, பத்து ஆண்டுகளில், ஜியோ 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள அதே வேளையில் இந்தியர்களுக்கு மலிவான விலையில் தரவுச் சேவையையும் வழங்கி வருகிறது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறையில், ஸ்டார்லிங்க் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் வருகையையும், அதன் மூலம் ஏற்படும் போட்டியை எப்போதும் ரிலையன்ஸ் வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
Summary
Reliance Industries on Friday said that every player should abide by the law and rules of the land.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


