மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வருகிற செப். 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, அசாம், பிகார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களுக்கும், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 9 மாநிலங்களில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆக. 14 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக. 21.
வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் -அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், திரிபுரா மாநிலங்களுக்கு ஆக. 26 எனவும், பிகார், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆக. 27 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு செப். 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணிக்கு நடைபெறும்.
மாநிலங்களவையில் எம்.பி.க்களாக இருந்த சிலர் மக்களவைக்குத் தேர்வான நிலையில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.