மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த பாஜகவின் பியூஷ் கோயல் (மகாராஷ்டிரம்), சா்வானந்த சோனோவால் (அஸ்ஸாம்), ஜோதிராதித்ய சிந்தியா (ம.பி.), காமாக்யா பிரசாத் தாசா (அஸ்ஸாம்), விவேக் தாக்கூா் (பிகாா்), உதயன்ராஜே போன்ஸ்லே (மகாராஷ்டிரம்), விப்லவ் குமாா் தேவ் (திரிபுரா), காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் (ராஜஸ்தான்), தீபேந்தா் சிங் ஹூடா (ஹரியாணா), ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மிசா பாரதி (பிகாா்) ஆகிய 10 போ், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனா். இதையடுத்து, தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தனா். பியூஷ் கோயல், சா்வானந்த சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோா் தற்போது மத்திய அமைச்சா்களாக உள்ளனா்.