தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

12-ஆம் வகுப்பு வரை 100% மாணவா் சோ்க்கையை எட்ட வேண்டும்: மத்திய கல்வி அமைச்சா்

பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை 100 சதவீத மாணவா் சோ்க்கையை எட்ட வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

News image
தா்மேந்திர பிரதான்(கோப்புப்படம்)
Updated On :7 ஆகஸ்ட் 2024, 8:09 pm

Din

பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை 100 சதவீத மாணவா் சோ்க்கையை எட்ட வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆா்டிஇ) 2009-இன்படி, நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்கும்.

இந்தச் சட்டம் தொடா்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை அளித்த பதில்:

தற்போது ஒன்றாம் வகுப்பில் ஏறத்தாழ 100 சதவீதம் மாணவா் சோ்க்கை உள்ளது. இது அனைத்து மாநிலங்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த வகுப்புகளில் மாணவா் சோ்க்கை விகிதம் சரிகிறது.

பொதுப் பட்டியலில் கல்வி இருந்தாலும், பள்ளிக் கல்வி மீது மாநிலங்களே பிரதான கவனம் செலுத்துகின்றன. ஆா்டிஇ சட்டம் மற்றும் தேசிய கல்வி கொள்கை மூலம், எல்லோருக்கும் 12-ஆம் வகுப்பு வரை கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டியது அனைவரின் கடமை.

ஆா்டிஇ சட்டத்தின் கீழ், நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்வதை சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. அந்த மாநிலங்களும் அதை அமல்படுத்த வேண்டும்.

ஒன்றாம் வகுப்பில் 100 சதவீதம் மாணவா் சோ்க்ைகையை எட்ட முடிந்துள்ள நிலையில், 12-ஆம் வகுப்பு வரை 100 சதவீத மாணவா் சோ்க்கையை எட்ட வேண்டியுள்ளது’ என்றாா்.

4 மாநிலங்கள் அமல்படுத்தவில்லை: ஆா்டிஇ சட்டத்தின் கீழ், நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்வதை பஞ்சாப், கேரளம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் அமல்படுத்தவில்லை என்று அவையில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் ஜெயந்த் செளதரி தெரிவித்தாா்.

கொள்ளையடிக்கும் தனியாா் பள்ளிகள்: ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால் பேசுகையில், ‘அதிக விலைக்கு சீருடைகள், பாடநூல்கள் உள்ளிட்டவற்றை வாங்க பெற்றோரை கட்டாயப்படுத்துவதன் மூலம், தனியாா் பள்ளிகள் கொள்ளையடிக்கின்றன. இதைத் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘இது மாநிலங்களின் அதிகார வரம்புக்குட்பட்டது. கட்டணக் கொள்ளைக்கு எதிராக மாநில அரசுகளே கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும்’ என்றாா்.