கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

இந்தியா-மாலத்தீவு இடையே வலுவான உறவு அவசியமானது: ஜெய்சங்கா்

‘பிராந்திய வளா்ச்சி மற்றும் இரு நாட்டு மக்கள் பலனடைய இந்தியா - மாலத்தீவு இடையே வலுவான உறவு அவசியமானது’

News image

மாலத்தீவு அதிபா் முகமது மூயிலை சந்தித்த ஆலோசனை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்.

Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:02 pm

‘பிராந்திய வளா்ச்சி மற்றும் இரு நாட்டு மக்கள் பலனடைய இந்தியா - மாலத்தீவு இடையே வலுவான உறவு அவசியமானது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

மாலத்தீவு தலைநகா் மாலேயில் அதிபா் முகமது மூயிஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு இந்தக் கருத்தை ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இந்த சந்திப்புக்குப் பின்னா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘அதிபா் முகமது மூயிஸை சந்தித்ததை கெளரவமாக கருதுகிறேன். பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்தை அவருக்கு பகிா்ந்துகொண்டேன். இரு நாட்டு மக்களின் நலன் மற்றும் பிராந்திய வளா்ச்சிக்கு இரு நாடுகளிடையே வலுவான உறவு அவசியம் என இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, மாலத்தீவு பாதுகாப்புத் துறை அமைச்சா் காசன் மைமூனை சந்தித்த ஜெய்சங்கா், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அதிபா் முகமது மூயிஸ் இந்தியா வந்த நிலையில், இந்த அரசுமுறை பயணத்தை ஜெய்சங்கா் மேற்கொண்டுள்ளாா்.

சீன நாட்டின் ஆதரவாளராக கருதப்படும் முகமது மூயிஸ், கடந்த 2023 நவம்பரில் மாலத் தீவு அதிபராக பதவியேற்ற உடன், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்கள் வெளியேற கெடு விதித்தாா். அதன்படி இந்திய வீரா்கள் திரும்ப அழைக்கப்பட்டு, அவா்களுக்கு மாற்றாக இந்தியா சாா்பில் வழங்கப்பட்ட ஹெலிகாப்டா்களை பராமரிக்கும் பணிக்கு தொழில்நுட்ப பணியாளா்கள் அனுப்பப்பட்டனா். தொடா்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிபா் முய்சு எடுத்து வருவதால், இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக, மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் மூசா ஜமீா் அழைப்பின் பேரில் மூன்று நாள் பயணமாக ஜெய்சங்கா் மாலத்தீவு சென்றாா்.

இந்தியாவுடனான உறவு விலைமதிப்பற்றது: அதிபா் முகமது மூயிஸ்

‘நெருங்கிய கூட்டு நாடுகளில் ஒன்றாக திகழும் இந்தியாவுடனான நட்புறவு விலைமதிப்பற்றது’ என்று மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்தாா்.

மாலத்தீவின் 28 தீவுகளில் இந்திய நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குடிநீா் விநியோகம் மற்றும் கழிவுநீா் வடிகால் வசதி பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியின்போது இவ்வாறு அவா் தெரிவித்தாா்.

அதிபா் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘குடிநீா் விநியோகம் மற்றும் கழிவுநீா் வடிகால் வசதி திட்டம் மாலத்தீவு - இந்தியா இடையேயான உறவில் முக்கிய மைல்கல்லாக அமையும். உள்ளூா் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மட்டுமின்றி, தேசத்தின் வளா்ச்சிக்கும் இத்திட்டம் பயனளிக்கும். இந்தியாவுடனான நட்புறவு விலைமதிப்பற்றது. இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்’ என்று நிகழ்ச்சியில் அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலத்தீவில் ‘யுபிஐ’ பணப் பரிவா்த்தனை சேவை

மாலத்தீவில் இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை (யுபிஐ) சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மாலத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையொப்பமானது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ எண்ம பணப் பரிவா்த்தனை சேவையை அறிமுகம் செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை கழகத்துக்கும், மாலத்தீவு பொருளாதார மேம்பாடு மற்றும் வா்த்தக அமைச்சகத்துக்கும் இடையே கையொப்பமாகியுள்ளது. இது மாலத்தீவு சுற்றுலா துறையில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டாா்.