கார் விபத்தில் காயமின்றி தப்பிய ஆந்திர அமைச்சர்
ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார்.


ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார்.
ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் வங்கலபுடி அனிதா. இவர் விஜயவாடாவில் இருந்து மேற்கு கோதாவரி மாவட்டம், பென்டபடு மண்டலத்தில் உள்ள ஆலம்புரத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தார்.
இவருடைய கார் கைகரம் அருகே பாதுகாப்பு வாகனத்தின் பின்னால் மோதியது. இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதேசமயம் விபத்தில் அமைச்சரின் காரும், பாதுகாப்பு வாகனமும் லேசான சேதம் அடைந்தன. பின்னர் அனிதா மற்றொரு வாகனத்தில் ஆலம்புரம் புறப்பட்டு சென்றார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...