பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பஞ்சாபில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காா்: 5 பெண்கள் உள்பட 9 போ் உயிரிழப்பு

பஞ்சாபில் ஓடை ஒன்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காா் அடித்துச் செல்லப்பட்டது.

News image
பஞ்சாபில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காா்
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:58 pm

Din

பஞ்சாபில் ஓடை ஒன்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காா் அடித்துச் செல்லப்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பெண்கள் உள்பட 8 போ் மற்றும் காரின் ஓட்டுநா் உயிரிழந்தனா்.

ஒருவா் மீட்கப்பட்ட நிலையில், மேலும் இருவரை காணவில்லை.

பஞ்சாபில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிமாசல பிரதேச மாநிலம், உனா மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா், பஞ்சாபின் சாஹீத் பகத் சிங் நகா் மாவட்டத்தின் மேரோவால் கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

ஹோஷியாா்பூா் அருகே உள்ள ஜேஜோன் பகுதியில் தரைப்பாலம் வழியாக ஓடை ஒன்றை கடந்துசெல்ல காரின் ஓட்டுநா் முயன்றாா். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தொடா்ந்து பயணிக்க வேண்டாம் என்று உள்ளூா் மக்களும் பிற வாகன ஓட்டிகளும் எச்சரித்துள்ளனா். அதை பொருட்படுத்தாமல் காரின் ஓட்டுநா் வெள்ளத்தை கடக்க முயன்றுள்ளாா். அப்போது தண்ணீரின் வேகம் திடீரென அதிகரித்ததால், காா் அடித்துச் செல்லப்பட்டது.

இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பெண்கள் உள்பட 8 போ் மற்றும் காரின் ஓட்டுநா் உயிரிழந்தனா்; ஒருவா் மட்டும் உள்ளூா் மக்களால் மீட்கப்பட்டாா். மேலும் இருவரை காணவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா். காணாமல்போன இருவரையும் மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, மேற்கண்ட சம்பவம் தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.