தெருநாய்கள் (கோப்புப் படம்)
இந்தியா
ஜாா்க்கண்ட்: தெருநாய் கடித்து 6 மாதக் குழந்தை உயிரிழப்பு
ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கோபிபூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 6 மாத பெண் குழந்தையின் தாயாா் கழிவறைக்குச் சென்றிருந்தபோது குழந்தையை தெருநாய் வெகுதூரம் இழுத்துச் சென்று கடித்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் இருந்த மனோஹா் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.