மருத்துவர் வன்கொடுமை-கொலை விவகாரம்: விடை கிடைக்காத 15 கேள்விகள்!

கொல்கத்தாவில் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடை கிடைக்காத கேள்விகள்...
மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்PTI
Published on
Updated on
2 min read

கொல்கத்தவிலுள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் விடை இல்லாத கேள்விகள் எழுந்துள்ளன.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் அரசு மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று (ஆக. 8) இரவுப் பணிக்கு வந்த அந்த பெண் மருத்துவர், மறுநாள் காலை அங்குள்ள கருத்தரங்கு அறையில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ரத்தம் வழிந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக, உடல்கூறாய்வில், அந்த மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தூங்கி எழுந்து உடையை அலசிய கொலையாளி

இந்த விவகாரத்தில் விடை கிடைக்காத 15 கேள்விகள்:

கொலை செய்த பிறகு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டாரா? அல்லது பாலியல் வன்கொடுமை செய்த பிறகு கொலை நடந்ததா?

குற்றம்சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராயைத் தவிர வேறு யாரேனும் சம்பவ இடத்தில் இருந்தனரா? வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? இதுபோன்ற கொடுமைகளை நிகழ்த்துவது தனி நபரால் சாத்தியமா?

கொல்கத்தா காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு இச்சம்பவத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது நபர் ஈடுபடவில்லை என்பதில் உறுதியாக உள்ளதா?

மருத்துவ மாணவர்களிடையே ஆடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் பயிற்சி மருத்துவர் ஒருவரும் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ் இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 11) பகிர்ந்துள்ளார். இந்த ஆடியோ உண்மைதானா என்பதை காவல் துறை விசாரித்ததா? பயிற்சி மருத்துவரிடம் விசாரணை நடத்தியதா?

குற்றம் சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராய், குடிபோதையில் மருத்துவர்களிடம் தவறாக நடந்துகொண்ட வரலாறும் ஏற்கெனவே உண்டு. அவருக்கு எதிராக ஏதேனும் புகார் பதிவாகியுள்ளதா? அப்படி புகார் எழுந்திருந்தால், நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

கல்லூரி வளாகத்தில் சஞ்சய் ராய் குடித்துவிட்டு தவறாக நடந்துகொண்டது முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் அல்லது நிர்வாகத்திற்குத் தெரியாதா?

2 ஆண்டுகளுக்கு முன்பு, 3 மாத கர்ப்பிணியான தனது மனைவியை அடித்ததற்காக, குடும்ப வன்முறைப் பிரிவில் ராய் மீது காளிகாட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: நீதிமன்றம் உத்தரவு

ராயின் முந்தைய காலகட்டம் குறித்து அறியும் முயற்சியைக் கூட விசாரணை காவல் துறையினரோ அல்லது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி நிர்வாகமோ மேற்கொள்ளவில்லையா?

மருத்துவமனை காவல் பணியில் பாதுகாப்பு தன்னார்வலர்களை வளாகத்தின் அனைத்து கட்டடங்களுக்கும் செல்ல அனுமதித்தது ஏன்?

வழக்கை சிபிஐ விசாரிக்கும் பட்சத்தில் ஏழு நாட்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? ஒரு காலக்கெடு விசாரணையின் தரத்தை பாதிக்காதா?

ஆர்ஜி கார் மருத்துவமனை முதல்வர் பொறுப்பை ராஜிநாமா செய்த சிலமணி நேரங்களில் சந்தீப் கோஷை கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியின் முதல்வராக்க மம்தா பானர்ஜி அரசு ஆர்வம் காட்டுவது ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com