சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)
சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)

மணீஷ் சிசோடியாவின் நடைப்பயணம் ஒத்திவைப்பு!

சிசோடியாவின் நடைப்பயணமானது ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Published on

ஆத் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவின் நடைப்பயணம் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியாவின் நடைப்பயணம் இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது.

சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)
தமிழகத்தின் 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது!

இந்த நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக நடைப்பயணத்தை ஒத்திவைக்குமாறு தில்லி போலீஸார் பரிந்துரைத்துள்ளனர்.

இதனை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி அமைச்சரவை அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் தில்லி காவல்துறையின் அறிவுரை உண்மையானது என்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் சிசோடியாவின் நடைப்பயணமானது ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். சுதந்திர தினத்தையொட்டி இந்த சமயத்தில் மோதலை நாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் பிறந்தநாளான ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நடைப்பயணம் தொடங்கும் என்பது இயற்கையின் திட்டமாக இருக்கலாம் என்றார்.

சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)
வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 401 உடல் பாகங்களுக்கான டிஎன்ஏ பரிசோதனை நிறைவு!

இந்து நாள்காட்டியின்படி, அவரது பிறந்த நாளன்று ஜன்மாஷ்டமி வருகிறது. எது நடக்கிறதோ அது நன்மைக்கே நடக்கும். தில்லியின் அனைத்து பகுதிகளையும் இந்த பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தில்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் 2025 பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆம் ஆத்மியின் அமைப்பை மேலும் வலுப்படுத்த மக்களை நேரடியாக சந்தித்து பேச உள்ளார் மணீஷ் சிசோடியா.

கலால் ஊழல் வழக்கில் 17 மாதங்களாக திகார் சிறையில் இருந்த மணீஷ் சிசோடியா கடந்த வாரம் ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com