
சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்புக் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனம் முக்கியஸ்தர்களின் பிறந்தநாள், விடுமுறை நாள்கள், முக்கிய தேதிகள் உள்பட சிறப்புத் தினங்களை அனிமேஷன்கள், ஸ்லைடுஷோக்கள், விடியோக்கள் மற்றும் கேம்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில், இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் கவன ஈர்ப்புச் சித்திரம் (டூடுல்) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியப் பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்ட வண்ணங்கள் நிறைந்த கதவுகளில் கூகுள் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், மதம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.