
மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஏன் ஒன்றாக நடத்தவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கும் நடப்பாண்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் அந்த மாநிலங்களுக்கு தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நாக்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,
'ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரத்திற்கான தேர்தல்கள் அறிவிக்கப்படவில்லை.
பிரதமர் மோடி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்று கூறுகிறார். ஏன் இந்த 2 மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தக்கூடாது? பிரதமர் மோடி சொல்வதில் உண்மையில்லை' என்றார்.
மேலும் வங்கதேச நிலவரம் குறித்து பேசுகையில், 'இன்றைய சூழ்நிலையில் ஒரு நாட்டிற்கு அமைதிதான் தேவை, சமூகமும் அரசியல்வாதிகளும் பொறுமையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்' என்றார்.
ஜம்மு -காஷ்மீருக்கு செப். 18, 25, அக். 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஹரியாணாவில் அக். 1 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இரு மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை அக். 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு -காஷ்மீருக்கு செப். 18, 25, அக். 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஹரியாணாவில் அக். 1 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இரு மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை அக். 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.