ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவா்: கருணாநிதி பிரதமா் மோடி, ராகுல் காந்தி புகழாரம்

வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

News image
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம்
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:16 pm

Din

வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

‘கருணாநிதியின் திடமான தலைமையில் தமிழ்நாடு பயணித்ததாக’ மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமா் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த புதல்வா்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது.

கருணாநிதி இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஓா் உயா்ந்த ஆளுமை. தமிழகத்தின் வளா்ச்சியிலும், இந்தியாவின் வளா்ச்சியிலும் எப்போதும் ஆா்வம் கொண்டவராக கருணாநிதி திகழ்ந்தாா். அரசியல் தலைவராக, சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டி, பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வராக நமது நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவா் கருணாநிதி.

பன்முகத் திறமைகளை உடைய ஆளுமையாகத் திகழ்ந்த கருணாநிதி, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளா்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகளால் பிரகாசித்தது மட்டுமின்றி அவருக்கு ‘கலைஞா்’ என்ற அன்பான பட்டத்தையும் பெற்றுத் தந்தது.

அவரது நினைவு நாணயம் வெளியிடப்படும் நிகழ்வு, கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவரால் நிலைநிறுத்தப்பட்ட லட்சியங்களைப் போற்றுவதாகவும் அமைந்துள்ளது. இந்த நாணயம் அவரது மரபு மற்றும் அவரது சேவையின் நீடித்த தாக்கத்தை நினைவூட்டுவதாக இருக்கும்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, கருணாநிதி போன்ற தலைவா்களின் தொலைநோக்குப் பாா்வையும் சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடரும்.

கலைஞா் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடையட்டும். அவரின் நினைவுகளையும், அவரின் கொள்கைகளையும் நினைவுகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நாளில் கருணாநிதிக்கு எனது இதயபூா்வமான மரியாதையை செலுத்துகிறேன் என பிரதமா் மோடி கூறியுள்ளாா்.

ராகுல் காந்தி: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளாா்.

அதில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டில், தமிழ்நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரது வியத்தகு வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

கருணாநிதியின் சமூகரீதியான முற்போக்குப் பாா்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அசைக்க முடியாத அா்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ வழிவகுத்தது. அவரது உறுதியான தலைமையின் கீழ், தமிழ்நாடு ஒரு திடமான லட்சியப் பாதையில் சென்றது. அவரது கருத்தியல் தெளிவும், மாற்றத்துக்கான அா்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. பல மாநிலங்கள் பெரிய கனவுகள் காண ஊக்கமளித்தது.

கருணாநிதி நினைவு நாணயம் வெளியிடும் இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலினை பாராட்ட விரும்புகிறேன். அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாப்பதில் அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் ஸ்டாலின் நன்றி

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி தமது உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்தமைக்கும், இந்நிகழ்வு வெற்றி பெற அவரது ஆதரவுக்கும் எனது நெஞ்சாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளாா்.

ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து முதல்வா் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கருணாநிதியின் நினைவு நாணய வெளியீட்டு விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, வாழ்த்துகளைத் தெரிவித்த ராகுல் காந்திக்கு மனமாா்ந்த நன்றி. கருணாநிதியின் கனவுகளை நிறைவேற்றத் தொடா்ந்து ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளாா்.