அந்தமான் நிகோபாரில் அதிக சம்பளம் தரும் எல்ஐசி!

ஹிமாசலில் மாத வருமானம் ரூ. 10,328 அளிக்கும் நிலையில், அந்தமான் நிகோபாரில் ரூ. 20,446 ஆக உள்ளது
எல்ஐசி
எல்ஐசி
Published on
Updated on
1 min read

அந்தமான் நிகோபார் தீவுகளில் பணிபுரியும் எல்ஐசி முகவர்கள்தான் அதிகபட்ச ஊதியம் பெறுவதாக, எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சகத்திடம் எல்ஐசி நிறுவனம் அளித்த தரவுகளின்படி, இந்தியா முழுவதும் மொத்தம் 13,90,920 ஆயுள் காப்பீட்டு முகவர்கள் உள்ளனர்.

அந்தமான் நிகோபார் தீவுகளில் எல்ஐசி முகவர்கள், மிகக்குறைந்த அளவிலான 273 என்ற எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். அவர்களின் சராசரி மாத வருமானம் ரூ. 20,446 ஆக உள்ளது.

அதிகப்படியான எண்ணிக்கையாக, உத்தரப் பிரதேசத்தில் 1.84 லட்சம் முகவர்கள் உள்ளனர். அவர்கள் மாத வருமானமாக ரூ. 11,887 பெறுகின்றனர்.

எல்ஐசி
சொல்லப் போனால்... பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி?

மகாராஷ்டிரத்தில் ரூ. 14,931 மாத வருமானத்துடன், 1.61 லட்சம் முகவர்கள் உள்ளனர். மேற்கு வங்கத்தில் ரூ. 13,512 மாத வருமானத்துடன் 1,19,975 முகவர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் ரூ. 13,444 மாதவருமானத்துடன் 87,347 முகவர்களும், கர்நாடகத்தில் ரூ. 13,265 மாத வருமானத்துடன் 81,674 முகவர்களும், ராஜஸ்தானில் ரூ. 13,960 மாத வருமானத்துடன் 75,310 முகவர்களும், மத்தியப் பிரதேசத்தில் ரூ. 11,647 மாத வருமானத்துடன் 63,779 முகவர்களும், தில்லியில் ரூ. 15,619 மாத வருமானத்துடன் 40,469 முகவர்களும் உள்ளனர்.

மேலும், ஹிமாசலில் மிகக் குறைந்த அளவிலாக ரூ. 10,328 மாத வருமானத்துடன், 12,731 முகவர்கள் உள்ளனர்.

எல்ஐசி
சத்தீஸ்கர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது! நடந்தது என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com