சத்தீஸ்கர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது! நடந்தது என்ன?

சத்தீஸ்கரின் பிலாய் நகர் தொகுதி எம்.எல்.ஏ. தேவேந்திர யாதவ் கைது
Devendra Yadav
தேவேந்திர யாதவ் (கோப்புப் படம்)எக்ஸ் தளப் பதிவு
Published on
Updated on
2 min read

சத்தீஸ்கரில் சத்னாமி சமூகத்தினருக்கு எதிராக குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேவேந்திர யாதவ் கைது செய்யப்பட்டார்.

சத்தீஸ்கரில் கடந்த மே மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் பலோடாபஜார்-பதபாரா மாவட்டத்தின் கிரௌத்புரி தாம் பகுதியில், முக்கிய பட்டியலினமாகத் திகழும் சத்னாமி சமூகத்தின் புனித சின்னமான வெற்றித் தூணை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.

இந்த செயலால், சத்னாமி சமூகத்தினர், ஜூன் மாதத்தில் போராட்டங்களை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், ஜூன் 10 ஆம் தேதியில், சத்னாமிகள் நடத்திய போராட்டத்தின்போது, பலோடாபஜாரில் இருந்த ஓர் அரசு அலுவலகம், 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது, அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தீ வைத்தது.

Devendra Yadav
சொல்லப் போனால்... பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி?

இதனையடுத்து, இந்த தீவைப்பு சம்பவத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேவேந்திர யாதவின் பங்கிருப்பதாகக் கூறி, கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, யாதவ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பொதுக் கூட்டத்தின் வீடியோவின் அடிப்படையில் காணும்போது, யாதவ் கூட்டத்தில் பங்கேற்றதாகத் தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து, யாதவின்மீது, பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், குற்றவியல் சதி, கலவரத்திற்கான தண்டனை, ஓர் அரசு ஊழியரின் கடமைகளைச் செய்வதற்கு தடையாக இருப்பது, அரசு ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தடுப்பது மற்றும் தாக்குவது, கொலை முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாதவுக்கு, ஆகஸ்ட் 20 வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், யாதவின் அறிக்கையை பதிவு செய்ய, காவல்துறையினர் மூன்று முறை அழைத்திருந்தனர்; ஆனால் யாதவ் ஒத்துழைக்காததால், கைது செய்யப்பட்டார்.

யாதவ் கைது செய்யப்படும் தகவல் அறிந்த யாதவின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தால், சுமார் 10 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகே, யாதவ் கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்யப்படும்போது யாதவ் தெரிவித்ததாவது ``நான் அரசாங்கத்திற்கு பயப்படவில்லை. மக்களுக்காக எனது போராட்டத்தைத் தொடருவேன். பலோடாபஜார் தீவைப்பு வழக்கில் காங்கிரஸ் தொண்டர்களை சிக்க வைக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது.

சத்னாமி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அப்பாவிகளுக்காக குரல் எழுப்பியதற்காக, அரசாங்கம் எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. நான் சட்டத்தின் மூலம், இந்தப் போரில் போராடுவேன்” என்று கூறினார்.

Devendra Yadav
ஓடிடியில் விரைவில் வெளியான மழை பிடிக்காத மனிதன்!

மேலும், யாதவின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, முன்னாள் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் ``யாதவின் கைது நடவடிக்கையானது, அரசியல் பழிவாங்கல் நோக்கமே. அரசியல் அழுத்தத்தின் பேரில், காவல்துறை செயல்பட வேண்டாம்.

இந்த சம்பவத்தில் பாஜகவின் பங்கு இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், பாஜக உறுப்பினர் யாரும் விசாரிக்கப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. இந்த முழு சம்பவத்திலும் அரசு மற்றும் காவல்துறையின் பங்கு சந்தேகத்திற்குரியது.

யாதவின் கைது முற்றிலும் அரசியல் வெறுப்பின் காரணமாகும். நாங்கள் அதை எதிர்க்கிறோம். நாங்கள் சட்ட ஆலோசனைகளை எடுத்து, அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்’’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com