விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஓடிடியில் விரைவில் வெளியான மழை பிடிக்காத மனிதன்!

மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

News image

மழை பிடிக்காத மனிதன். - எக்ஸ்

Updated On :18 ஆகஸ்ட் 2024, 4:32 am

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படம் விரைவாகவே ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கோலி சோடா, கடுகு படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இயக்குநராக பிரபலமானவர் விஜய் மில்டன். இவர் இயக்கிய ‘பத்து எண்றதுக்குள்ள’ திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இவர் இயக்கி வெளியான திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இதில், நாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சங்களைப் வெற்றது.

இந்த நிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்தில் 1 நிமிடக் காட்சியை படத்தின் ஆரம்பத்தில் யாரோ சேர்த்ததாக குற்றம் சாட்டியிருந்தார். பின்னர், படத்தில் இடம்பெற்ற சர்ச்சையை ஏற்படுத்திய அந்த ஒரு நிமிடக் காட்சியை தயாரிப்பு நிறுவனம் நீக்கியது.

கடந்த ஆக. 2 ஆம் தேதி வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படம், மிகவும் விரைவாகவே ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதன்படி டெண்ட்கொட்டா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் இப்படம் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.