கர்நாடகத்தில் ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் வேலை இது என இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை சித்தராமையாவும் மறுத்துள்ளார்.
இந்நிலையில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்து ஆக. 19 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது.
அதன்படி, இன்று கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகளுடன் அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் நடைபெறும் போராட்டத்தில் துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.