15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆக.27 வரை நீட்டிப்பு!

கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

கேஜரிவாலின் காவல் நீட்டிப்பு - Center-Center-Delhi

Updated On :20 ஆகஸ்ட் 2024, 9:38 am

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆக்ஸட் 27 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, மக்களவைத் தேர்தலையொட்டி இடைக்கால ஜாமீனில் வெளியேவந்த கேஜரிவால், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கலால் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இருப்பினும், இந்த வழக்கில் மத்திய புலனாப்வுப் பிரிவு(சிபிஐ) கைது செய்த நிலையில், திகார் சிறையில் இருந்துவரும் கேஜரிவால் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் காணொலிக் காட்சி வாயிலாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கில் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.