பெண் மருத்துவர் கொலை: 9-வது நாளாக தொடரும் போராட்டம்!
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதி கேட்டு மருத்துவர்களின் போராட்டம் 9-ஆவது நாளாகத் தொடர்கிறது.


கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதி கேட்டு மருத்துவர்களின் போராட்டம் 9-ஆவது நாளாகத் தொடர்கிறது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.
பெண் மருத்துவர் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தொடர்ந்து 9 ஆவது நாளாக கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் போராட்டம் நடைபெறும் இடத்தில் புறநோயாளிகளை சோதித்து மருந்து வழங்கி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
இதுபோன்று மேலும்ப சில பகுதிகளிலும் பிற துறையினரும் போராட்டம் நடத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...