வேலைவாய்ப்பின்மைக்கு சரியான தீர்வு அவசியம்: மாயாவதி

நாட்டில் கடுமையான வேலைவாய்ப்பின்மை மட்டுமல்ல, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கு இடையே பிளவு உள்ளது.
மாயாவதி (கோப்புப்படம்)
மாயாவதி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

வேலைவாய்ப்பின்மைக்கு சரியான தீர்வு அவசியம் என்று பகுஜன் சமாஜ கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நாட்டில் கடுமையான வேலைவாய்ப்பின்மை மட்டுமல்ல, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கு இடையே பிளவு உள்ளது.

மாயாவதி (கோப்புப்படம்)
கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆக.27 வரை நீட்டிப்பு!

இந்த நிலைமை பொதுமக்களையும், நாட்டின் நலனையும் பாதிக்கிறது. இது கவலைக்குரிய விஷம் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப போதுமான வேலைகள் ஏன் இல்லை? இதற்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் உத்தரப் பிரதேச அரசு வேலைவாய்ப்பில் ஏற்றம் இருப்பதாக மிகப்பெரிய விளம்பரங்கள் மூலம் கூறிவருகின்றது. கடின உழைப்பு இல்லாமல் எந்தவகையான சுயவேலைவாய்ப்பையும் ஒரு சாதனையாகக் கருதுவது வேலையின்மை மற்றும் பிற சிக்கல்களைத் தீர்க்காது என்று அவர் கூறினார்.

மாயாவதி (கோப்புப்படம்)
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சுமார் 250 மில்லியன் மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தில் 6,50,000-க்கும் அரசு வேலைகள் கோருவது கடலில் ஒரு துளி கலப்பது போன்றது. இதேபோல் மத்திய அளவில் நிரந்தர வேலைகளின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், பல பதவிகள் காலியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இது எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது. மாநிலத்தில் வேலையின்மையைக் கருத்தில் கொண்டு, சரியான தீர்வு காண்பது அவசியம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com