மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மும்பையில் மீண்டும் கனமழை!

பாந்த்ரா, குர்லா வளாகம் போன்ற சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

News image

மும்பையில் மீண்டும் மழை

Updated On :20 ஆகஸ்ட் 2024, 6:06 am

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் காலை 9.30 மணி முதல் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் பாந்த்ரா மற்றும் பாந்த்ரா குர்லா வளாகம் போன்ற சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

இன்று காலை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று மதியம் 12.22 மணிக்கு அரபிக்கடலில் 4.70 மீட்டர் உயரத்துக்கு அலை வீசும். கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 7.81 மிமீ, 3.06 மிமீ மற்றும் 3.62 மிமீ மழை பதிவாகியுள்ளது என்று அதிகாரி கூறினார்.

பிரஹன் மும்பையில் மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து போன்றவை வழக்கமான இயங்குகின்றன. ஆனால் மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைகளில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக மும்பையில் வெப்பநிலை வாட்டிவந்த நிலையில், மழை பெய்ததால் பூமி குளிர்ந்து வெப்பம் குறைந்துள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் மும்பையில் கனமழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.