அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திரிபுராவில் கனமழைக்கு 10 பேர் பலி!

கனமழையால் 34 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

News image
கனமழை- Center-Center-Delhi
Updated On :22 ஆகஸ்ட் 2024, 9:09 am

DIN

திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளத்துக்கு 10 பேர் உயிரிழந்தனர். 34 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரிபுராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்துவரும் நிலையில், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் ஏற்கனவே அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது.

தெற்கு திரிபுரா மாவட்டத்தின் தேவிபூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். முஹீரி, லாகேங் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 8 மாவட்டங்களைச் சேர்ந்த 6,620 குடும்பங்கள், மொத்தம் 34,100 பேர் 346 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் பெய்துவரும் கனமழையையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார்.

மீட்புப் பணிகளுக்கு உதவக் கூடுதலாக நான்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மாநிலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.