கிருஷ்ண ஜன்மாஷ்டமி: இவர்களெல்லாம் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்!

கிருஷ்ண ஜன்மாஷ்மிக்கு மக்கள் கூட்டம் குறித்து ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
மதுரா
மதுரா
Published on
Updated on
1 min read

மதுராவில் ஜென்மாஷ்டமி விழாவை முன்னிட்டு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் நெரிசலான நேரத்தில் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வருடாந்திர திருவிழா ஜென்மாஷ்டமியாகும். இந்தாண்டு ஆகஸ்ட் 26 அன்று மதுராவில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும், ஆகஸ்ட் 27 அன்று இரவு பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலிலும் கொண்டப்படுகிறது.

மதுரா
திரிபுரா வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்!

இந்த நாளில் கிருஷ்ண பக்தர்கள் அலைகடலெனத் திரண்டு கோயில் கூடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் மதுராவில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் மதுராவின் பாங்கே பிஹாரி கோயிர் நிர்வாகம் ஜன்மாஷ்மிக்கு மக்கள் கூட்டம் குறித்து ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், அன்றைய தினம், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மதுரா
மகராஷ்டிரத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன: சரத் பவார்

மேலும், கோயிலுக்குள் வரும் நுழைவும், வெளியேறும் வாயில்கள் தனித்தனியாக இருப்பதால் பக்தர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், காலணிகளை நுழைவில் சென்று எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளது.

மேலும், பக்தர்கள் தரிசனத்திற்கு முன் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜென்மாஷ்டமியன்று ஆரத்தி பூஜையில் பங்கேற்ற முதியவர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜென்மாஷ்டமி இரவு மங்கள ஆரத்தி தரிசனத்தின்போது கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com