போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அரசு முறை பயணமாக போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். முதலில் போலந்து சென்ற பிரதமரை அந்நாட்டு அதிபர், பிரதமர் வரவேற்றனர். இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. போர் வீரர்கள், தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு உக்ரைன் சென்றார். அங்குப் போரில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். இதன்பிறகு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில், போலந்து, உக்ரைன் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். தனி விமானம் மூலம் தில்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
கடந்த 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர்களில் ஒருவரான பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இந்தியாவிலிருந்து உக்ரைனுக்குப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணமும் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரச்னைகளுக்குப் போா் தீா்வல்ல: பிரதமா் மோடி

நொய்டாவில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ஒசூா் விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மேம்படுத்த வேண்டும்; சி.நரசிம்மன்

பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை




