வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாவ் நகரில் பெய் கனமழையால் 11 பேர் உயிரிழந்தனர்.
சமீபத்தில் பெய்த கனமழையால் ஹுலுடாவோவில், குறிப்பாக நகரின் ஜியான்சாங் கவுண்டி மற்றும் சுய்சோங் கவுண்டியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மின் இணைப்புகள், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள், வீடுகள் மற்றும் பயிர்நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்பது தேசிய மற்றும் மாகாண முக்கிய சாலைகள் மற்றும் 210 கிராமப்புற சாலைகள் 187 பாலங்கள் சேதமடைந்துள்ளன.
முதற்கட்ட புள்ளிவிவரங்களின்படி, ஹுலுடாவோவில் 1,88,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 1951ல் வானிலை பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஹுலுடாவ் நகரில் பெய்த கனமழை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 500 பேர், 150 சிறப்பு மீட்புப் பணியாளர்கள் மற்றும் 50 யூனிட் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சீனாவில் பருவ மழை பெய்துவரும் நிலையில் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் கனமழை வெள்ளம், நிலச்சரிவால் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.