சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கன்னட நடிகா் தா்ஷன் தனது ரசிகா் ரேணுகாசாமியை(34) கொலை செய்த வழக்கில், தர்ஷன் மற்றும் அவரது தோழி நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் தர்ஷன் நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனிடையே நடிகர் தர்ஷன் தூகுதீபா சிறை வளாகத்தில் திறந்தவெளியில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் சிகரெட்டை பிடித்தபடி தேநீர் பருகுவது போன்ற புகைப்படம் வெளியானது.
மேலும் அவருக்கு அருகே ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளாராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த ரேணுகாசாமியின் தந்தை காஷிநாத் எஸ். ஷிவானாகௌத்ரு கூறியிருப்பதாவது, “ரேணுகாசாமி கொலை வழக்கில் காவல்துறை மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த புகைப்படத்தை கண்டபின், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார். இந்த நிலையில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, சிறைத் துறை தலைமை இயக்குனரிடம் பேசியதாகவும், விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ள அவர், சிறைக்குச் சென்று வழக்கு குறித்து விசாரணை நடத்தி முழு அறிக்கை அளிக்கவும் மாநில டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் காவலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரத்தை சுத்தமான நகரமாக மாற்ற நடவடிக்கை: இரா. லட்சுமணன் எம்எல்ஏ

சூலூா் சிறுமி கொலை வழக்கில் கைதான இருவரும் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு!
கணவா் சிறைக்கு சென்றதால் விரக்தி: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



