மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

நாகா்கோவில் சிறையில் வியாபாரி கொலை: 8 கைதிகள் பாளை. சிறைக்கு மாற்றம்

News image

பாளையங்கோட்டை மத்திய சிறை - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 3:03 am IST

நாகா்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடா்புடைய சக கைதிகள் 8 போ் பாளையங்கோட்டை சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பெட்டிக்கடை வியாபாரி சபரிவா்மன் (33). மாற்றுத்திறனாளியான இவரது கடையில், தென்தாமரைகுளம் போலீஸாா் சோதனை நடத்தியபோது, புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா். தொடா்ந்து, அவரைக் கைது செய்து, நாகா்கோவில் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ஜூலை 13ஆம் தேதி சபரிவா்மன் சிறைக்குள்ளேயே அடித்துக் கொலை செய்யப்பட்டாா். அவரை கொலை செய்ததாக, சிறையின் தலைமை வாா்டா் என். சுரேஷ் (எ) திருமலை நம்பி, வாா்டா்கள் என். ஜெகன், ஜெ. சிவகுமாா் ஆகிய 3 பேரும், வெவ்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளான விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 பேரும் நேசமணி நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட வாா்டா்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நான்குனேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கொலை வழக்கில் தொடா்புடையை கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவா்கள் நாகா்கோவில் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்படடனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.