ஹிமாசலில் நீட் தேர்வாளர் மரணம்: தற்கொலையா? விபத்தா?

ஹிமாசலப் பிரதேசத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் ஒருவர், மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஹிமாசலப் பிரதேசத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் ஒருவர், மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

நீட் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றுவந்த நிலையில், மாடியிலிருந்து விழுந்த மாணவரின் மரணத்துக்கு காரணம் தற்கொலையா அல்லது விபத்தா? என்பது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹிமாசலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள ஹாத்வர் பகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்த மாணவர் 3வது மாடியிலிருந்து குதித்து இறந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (ஆக. 26) இரவு இச்சம்பவம் நடந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தற்கொலையா? விபத்தா? அல்லது தவறான சூதாட்டம் போன்ற சிக்கல்கள் காரணமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும் காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஹமீர்பூர் காவல் கண்காணிப்பாளர் பகத் சிங் தாக்குர், உடலைக் கைப்பற்றி காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவரின் பெற்றோர் இணைய விளையாட்டைக் குற்றம் சாட்டி, தங்கள் மகனின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com