அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

நாற்காலியை மட்டுமே ராகுல் துரத்துகிறார்: கங்கனா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் விமர்சனம்

News image

கங்கனா ரணாவத் மற்றும் ராகுல் காந்தி (கோப்புப் படம்)

Updated On :28 ஆகஸ்ட் 2024, 1:10 pm

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெளிவற்றவர் என்று கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தை சித்திரிக்கும் எமர்ஜென்சி என்ற புதிய படத்தில் இந்திரா காந்தியின் தோற்றத்தில் பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.

இந்த நிலையில், எமர்ஜென்சி படம் குறித்த தொலைக்காட்சி உரையாடலில் பேசிய கங்கனா, ``ஒரு தலைவராக தான் யார்? என்பது குறித்து ராகுலுக்கு ஒரு தெளிவான யோசனை இல்லை என்று தெரிகிறது. ஒரு நாற்காலியை மட்டுமே அவர் துரத்துகிறார்.

எப்போதுமே தனது பேச்சுகளிலும், நடத்தையிலும் குழப்பமாகவே அவர் இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தாக்க, மக்களவையில் சிவபெருமான் படத்தைப் பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சையின்போது, ராகுல் காந்தி மீது போதைப்பொருள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தேன்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், இந்திரா காந்தியையும் குறிப்பிட்ட கங்கனா ``அனைவராலும் இந்திராகாந்தி மிகவும் நேசிக்கப்பட்டார்; ஆனால், அதைவிட அதிகமாக வெறுக்கவும்பட்டார்’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.