கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

குஜராத்தில் நீடிக்கும் கனமழை: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு

குஜராத்தில் நீடித்து வரும் கனமழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 16-ஆக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 7-ஆக இருந்தது.

News image

குஜராத் மாநிலம் வதோத்ராவில் புதன்கிழமை பெய்த கன மழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய சாமா குடியிருப்புப் பகுதியிலிருந்து படகுகள் மூலம் மக்களை மீட்கும் ராணுவ வீரா்கள்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:07 pm

Din

குஜராத்தில் நீடித்து வரும் கனமழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 16-ஆக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 7-ஆக இருந்தது.

குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 24 ஆறுகள்; 137 நீா்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்து வருகிறது. நவ்சாரி, வதோதரா மற்றும் கெடா உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15,000 போ் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இதனிடையே கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 7 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தநிலையில், புதன்கிழமை அந்த எண்ணிக்கை 16-ஆக அதிகரித்தது.

இது தொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஆனந்த் மாவட்டத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா். மகிசாகா் மாவட்டத்தில் 2 பேரும், கேடா மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் தலா ஒருவரும் சுவா் இடிந்த சம்பவங்களால் உயிரிழந்தனா். ஜுனாகத் மற்றும் பரூச் மாவட்டங்களில் தலா ஒருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை ஆகியவை இணைந்து மாநிலத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மும்பை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் உள்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது; 10 ரயில்கள் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டது என மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனிடையே மாநில முதல்வா் பூபேந்திர படேல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘குஜராத்தில் கனமழை நிலவரம், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து பிரதமா் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தாா். பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களை அவா் வழங்கினாா்.

குஜராத்தின் நிலையைத் தொடா்ந்து அவா் கண்காணித்து வருகிறாா். குஜராத் மக்கள் மீது அவருக்கு ஆழ்ந்த அக்கறை உள்ளது. இயற்கை பேரிடா்களின் போது குஜராத் மக்களுக்கு ஆதரவாக நிற்பதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளாா்’ என குறிப்பிட்டிருந்தாா்.