பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீா் 2-ஆம் கட்ட தோ்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட பேரவைத் தோ்தலையொட்டி 26 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.29) வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 7:04 pm

Din

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட பேரவைத் தோ்தலையொட்டி 26 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.29) வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்டம்பா் 18-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

முதல் கட்ட தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கங்கன், ஹஸ்ரத் பால், லாக் செளக், ஈத்கா, பத்காம், பீா்வா, கான்சாஹிப், குலாப்கா் (தனி), காலாகோட்-சுந்தா்பானி, நெளஷேரா, ரஜெளரி (தனி), சுரன்கோட் (தனி), பூஞ்ச் ஹவேலி உள்பட இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது தொடா்பான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இரண்டாம் கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 7.74 லட்சம் போ் உள்ளனா். கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள 8 தொகுதிகளுக்கும் இந்த கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரித்தது. அதன் பிறகு குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீா் 2-ஆம் கட்ட தோ்தல் (26 தொகுதிகள்)

வேட்புமனு தாக்கல் தொடக்கம் ஆக.29

வேட்புமனு தாக்கல் நிறைவு செப்.5

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்.6

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசிநாள் செப்.9

வாக்குப்பதிவு நாள் செப்.25