சமோசா விற்ற மாணவர் நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

கடின உழைப்பும், குறிக்கோளும் இருந்தால் யார் வேண்டுமானாலும் மருத்துவம் படிக்கலாம்..
சன்னிகுமார்
சன்னிகுமார்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன் சமோசா விற்பனையுடன் இளங்கலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் நீட் நுழைவுத்தேர்வில் பங்கேற்க லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டிப்போட்டுப் படித்து வருகின்றனர். இதில் சிலருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஒருசிலருக்கு வருடங்கள் கழிந்தாலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து போராடும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சன்னிகுமார்
லண்டன் சென்ற அண்ணாமலை: ஹெச். ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு

அப்படி பலருக்கும் எட்டாக்கனியாக இருக்கும் நீட் தேர்ச்சி, சாலையோரம் சமோசா விற்கும் 18 வயது மாணவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்றால் அது அச்சரியம் தானே...!

உத்தரப் பிரதேசத்தின், நொய்டாவில் வசிப்பவர் சன்னி குமார் (18). இவர் 12-ம் வகுப்பு படிக்கும்போதே, பள்ளியை முடித்துவிட்டு மாலையில் சுமார் 5 மணி நேரம் சாலையோரத்தில் அவரது தந்தை நடத்தும் சமோசா கடையில் வேலை செய்து வந்தார்.

சன்னிகுமார்
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை சன்னிகுமாருக்கு. அதற்கு முழு மூச்சுடன் சமோசா விற்றுக்கொண்டே கிடைக்கும் நேரத்தில் கடினமாகப் படித்து வந்துள்ளார். நீட் தேர்வு குறிப்புகளை பேப்பரில் எழுதிவைத்து அதனை சுவரில் ஒட்டிவைத்துப் படித்துவந்ததோடு, இரவு முழுவதும் கண்விழித்தும் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் சன்னி 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியும் பெற்றுள்ளான். இந்த விடியோ இன்ஸ்டாவில் அவரது நண்பர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அவரது புகழ் தற்போது பரவத் தொடங்கியுள்ளது.

சன்னிகுமார்
வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இதுபற்றி சன்னிகுமார் கூறுகையில்,

மருந்துகளை பார்க்கும் போதெல்லாம் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டது. நோய்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் மருத்துவம் படிக்கும் ஆசைப்பட்டேன். சமோசா விற்பதினால் என் எதிர்காலம் பாதிக்காது, தொடர்ந்து இந்த தொழிலைச் செய்துகொண்டே மருத்துவம் படிப்பேன் என்று கூறியுள்ளார்.

சன்னிகுமாரின் வாழ்க்கை போராட்டத்தைக் கவனித்துவந்த அலேக் பாண்டே என்பவர் மருத்துவக் கல்லூரி கட்டணமாக ரூ. 6 லட்சம் நிதி அவருக்கு வழங்கியுள்ளார்.

கடின உழைப்பும், குறிக்கோளும் இருந்தால் யார் வேண்டுமானாலும் மருத்துவம் படிக்கலாம் என்று சன்னி குமார் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.