நிலச்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.15 கோடி நிதியுதவி வழங்குவதாக சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட பதிவில்,
திரிபுரா மற்றும் கேரளத்திற்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.15 கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக திரிபுரா மற்றும் கேரளத்தில் இயற்கை பேரிடர்களால் பெரியளவில் உயிர்கள் மற்றும் உடைமைகள் சேதம் அடைந்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கதாகும். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பாதகமான சூழ்நிலையில் இரு மாநிலங்களுக்கும் உதவ சத்தீஸ்கர் அரசு தயாராக உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளதாக எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.