அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பாகிஸ்தானில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி!

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலியான சோகம்..

News image

பாகிஸ்தானில் நிலச்சரிவு

Updated On :30 ஆகஸ்ட் 2024, 12:10 pm IST

வடக்கு பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள மைதான் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு சரிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண், ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கிய 12 உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் பருவமழை ஜூலை முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் சிந்து, வடகிழக்கு/தெற்கு பலுசிஸ்தான், வடகிழக்கு/மத்திய பஞ்சாப், போடோஹர் பகுதி, இஸ்லாமாபாத், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் முர்ரே, கல்லியத், மன்செரா, கோஹிஸ்தான், சித்ரால், டிர், ஸ்வாட், ஷாங்லா, புனர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், பாகிஸ்தானின் கரையோரப் பகுதிகள் சிந்து கடற்கரையை ஒட்டி வடகிழக்கு அரபிக்கடலில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.