தொடர் விடுமுறை: சென்னை மாநகர் பேருந்துகளில் 3 நாள்களில் 4.15 லட்சம் பேர் பயணம்!சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

Updated On :

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.

இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களிலும், ஒடிசா மாநிலத்திலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றது. ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வருகின்றது. குளிர்ந்த காலநிலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.