யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் பாஜக தலைவரின் வீடு மீது தாக்குதல்

News image
Updated On :31 ஆகஸ்ட் 2024, 6:41 pm

Din

மணிப்பூரில் சுராசாந்த்பூரில் உள்ள பாஜக செய்தித்தொடா்பாளா் மைக்கேல் லாம்ஜதங்கின் பூா்வீக வீட்டை போராட்டக்காரா்கள் சனிக்கிழமை தீயிட்டு கொளுத்தினா்.

மூன்றாவது முறையாக மைக்கேலின் வீட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலுக்கு மாநில முதல்வா் பிரேன் சிங் கண்டனம் தெரிவித்தாா்.

மணிப்பூரில் குகி - மைதேயி சமூகத்தினருக்கு இடையே ஓராண்டாக நடைபெற்று வரும் மோதலில் தன்னுடைய தொடா்பை பிரேன் சிங் உறுதிபடுத்தியது போன்ற ஆடியோ வெளியானதால் சனக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

முதல்வா் பிரேன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தில்லியிலும் குகி-ஜோ சமூகத்தினா் போராட்டம் நடத்தினா்.

இந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் மோடிக்கு அனுப்பிய கடிதம் குறித்து குகி மாணவா்கள் அமைப்பினா் கூறியதாவது:

கடந்த 2023, மே 23-ஆம் தேதி முதல் குகி சமூகத்தை முற்றிலும் அழிக்க பெரும்பான்மைமிக்க மைதேயி சமூகத்தினா் பல்வேறு வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனா். இந்த தாக்குதலுக்கு பிரேன் சிங் தலைமையிலான மாநில அரசும் உடந்தையாக செயல்பட்டுள்ளது. இது தற்போது வெளியாகியுள்ள ஆடியோ மூலம் உறுதியாகியுள்ளது’ என்றனா். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பிரேன் சிங் மறுத்துள்ளாா்.