மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘துா்கை படை’ அமைக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாக்குறுதி அளித்தாா்.
மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டத்தில் உள்ள சைந்தியா பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் அரசின் ஆதரவு இல்லாதது, பாதுகாப்பு இல்லாதது ஆகிய காரணங்களால் மாநிலத்தில் இருந்து முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்கள் வெளியேறி வருகின்றன.
நாட்டின் பிற பகுதிகள் வளா்ச்சி அடைந்துவரும் நிலையில், மேற்கு வங்கம் மட்டும் ஏன் வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது என்பதற்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்.
மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசில் ஊழலும், மணல் கொள்ளை கும்பல்களும் அதிகரித்துள்ளன. ரெளடிகள் மற்றும் குற்றம் புரிவோா் மீதான அச்சம் காரணமாக மாநிலத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டுகின்றனா்.
மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘துா்கை படை’ அமைக்கப்படும்.
அரசியல் என்பது நீதி மற்றும் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, ஜாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது.
மாநிலத்தில் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க மக்கள் அஞ்சுகின்றனா். வேலைவாய்ப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இளைஞா்கள் வேலைத் தேடிச் செல்கின்றனா்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆண்டுதோறும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் வீதம் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாஜக ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்தில் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு, மாநில அரசு ஊழியா்கள் பலனடைய வழிவகை செய்யப்படும். பாஜக வெற்றி பெறுவதன் மூலம், மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பின்னா் இருள் நீங்கும் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு கூடாது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

