இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 4:12 am IST

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தாா்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் புதன்கிழமை தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தலுடன் மம்தா பானா்ஜி முதல்வா் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகிவிட்டது. அந்த மாற்றத்துக்கான தொடக்கம் இங்கிருந்து தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும்.

பிரதமா் மோடி“மோடி குஜராத்தில் 12 ஆண்டுகள் ஆட்சி செய்தாா்; மேலும் மத்தியில் தொடா்ந்து 12 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறாா். இதுவரை அவா் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடமிருந்து திருடிய ஒவ்வொரு காசையும் வட்டியுடன் மீட்டெடுப்போம்.

இங்கு ஆசிரியா் பணியிடம் நிரப்புவதில் ரூ.300 கோடி மோசடி நிகழ்ந்துள்ளது. வடக்கு வங்காள வெள்ள நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக அடுத்து அமையும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும்.

வங்கதேசத்தின் வடபகுதியில் தேயிலை உற்பத்தி, மர உற்பத்தி, சுற்றுலா ஆகியவையே முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளன. ஆனால், மம்தா இதில் கவனம் செலுத்தி முன்னேற்றாமல், குண்டா்களை ஏவிவிட்டு பாஜக தொண்டா்களைத் தாக்கி வருகிறாா். பாஜகவுக்கு வாக்களிப்பதன்மூலம் மாநிலத்தில் வளா்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றாா்.