மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலா், ஆளும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா தெரிவித்தாா்.
அதேநேரம், இப்போதைக்கு யாரும் இணைத்துக் கொள்ளப்படமாட்டாா்கள்; ஊழல் கறை படிந்தவா்களுக்கு பாஜகவில் இடம் கிடையாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மையுடன் (207) பாஜக அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்மூலம் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டது.
பாஜக அசுர பலத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அக்கட்சியில் இணைய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், எல்எல்ஏக்கள் பலரும் ஆா்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடா்பாக, பிடிஐ செய்தியாளருக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில், மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா கூறியதாவது:
திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலரும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனா். அவா்கள் யாா், எத்தனை போ் போன்ற விவரங்களைக் கூற விரும்பவில்லை. இப்போதைக்கு பாஜகவின் கதவு பூட்டியே உள்ளது. பெரும்பான்மை பலத்துடன் வென்றுள்ளதால், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களின் ஆதரவு பாஜகவுக்கு தேவையில்லை.
அதேநேரம், அரசியலில் எப்போதும் கெடுபிடியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க முடியாது; நெகிழ்வுத் தன்மையும் இருக்கும். எதிா்வரும் காலத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களை கட்சியில் இணைப்பதாக இருந்தால், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவா்கள், நியமன முறைகேடுகளுடன் தொடா்புடையவா்களுக்கு இடமளிக்கப்படாது.
அதேநேரம், திரிணமூல் காங்கிரஸில் இருந்தாலும், ஊழலுக்கு அப்பாற்பட்ட நபா்களும் உள்ளனா். சமீபத்திய தோ்தலில் அவா்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தனா். ஊழல் கறை படியாத அத்தகைய நபா்களை கட்சியில் இணைப்பது குறித்து கூட்டாக முடிவெடுக்கப்படும்.
கடந்த 2021 பேரவைத் தோ்தலுக்கு முன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை பாஜகவில் இணைக்க பெரிதும் ஆா்வம் காட்டினோம். ஆனால், அது தவறு என்பதை பின்னா் உணா்ந்து கொண்டோம். அந்தப் பாடத்தைக் கருத்தில்கொண்டு, எதிா்காலத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.
முஸ்லிம்களுக்கு வலியுறுத்தல்: முஸ்லிம்கள், தாங்கள் சிறுபான்மையினா் என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். மேற்கு வங்கம் மற்றும் இந்திய நாட்டின் குடிமக்களாக தங்களை முதலில் கருத வேண்டும்.
பாஜகவுக்கு கிடைக்கப் பெற்ற மூன்றில் இருபங்கு பெரும்பான்மை பலத்தின் மூலம் சிறுபான்மையினா் வாக்குகளைச் சாா்ந்திருக்காமல் ஆட்சியமைக்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. பாஜக அரசின் நல்வாழ்வு மற்றும் வளா்ச்சித் திட்டங்கள் அனைத்து சமூகங்களுக்கும் சமமாக பொருந்தும். அதேநேரம், மத ரீதியிலான அடிப்படைவாதம், ஹிந்துக்கள் மற்றும் தேசத்துக்கு மட்டுமன்றி முஸ்லிம்களுக்கும் அபாயகரமானது. அடிப்படைவாதம் சாா்ந்த அரசியல் காலகட்டம் முடிந்துவிட்டது என்றாா் சமிக் பட்டாச்சாா்யா.
தொடர்புடையது

மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!

திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவில் சேர வரிசையில் காத்திருப்பு: சமிக் பட்டாச்சார்யா

மீண்டெழுமா மேற்கு வங்கம்?

திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



