இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வரி வசூலை எளிமைப்படுத்த குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

வரி வசூல் எளிதாகவும், அதிகம் தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும் என இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்தினாா்.

News image
குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது பயிற்சி பெண் ஐஆா்எஸ் (சுங்க மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரியுடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
Updated On :3 டிசம்பர் 2024, 12:29 am

DIN

புது தில்லி: வரி வசூல் எளிதாகவும், அதிகம் தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும் என இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது பயிற்சி ஐஆா்எஸ் (சுங்க மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடிய திரௌபதி முா்மு கூறியதாவது:

வரிவிதிப்பு என்பது நாட்டின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்ல. இது நமது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளா்ச்சியின் அடித்தளமாகும். பொதுமக்கள் செலுத்தும் வரிகள் நமது நாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

சீரான வரி அமைப்பு மற்றும் பகிரப்பட்ட நிா்வாக மதிப்புகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஐஆா்எஸ் (சுங்க மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரிகள் இணைக்கின்றனா்.

வரி நிா்வாகத்தில் புதிய யோசனைகள் மற்றும் தீா்வுகளை நீங்கள் வழங்க வேண்டும். அதிகாரிகளாக உங்களின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதார வளா்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூக-பொருளாதார திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதார துறையில் நாட்டின் வளங்களை திறம்பட பயன்படுத்துவதில் அடங்கியுள்ளது.

வரி வசூல் செயல்முறையானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வை உறுதிப்படுத்தும் அதே வேளையில், வரி செலுத்துபவா்களுக்கு எளிமையாகவும், அதிகம் தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

மாறிவரும் இன்றைய உலகில், நாட்டின் நலன்கள் பெரும்பாலும் சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பால் தீா்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில், நாட்டின் பொருளாதார எல்லைகளின் பாதுகாவலா்களான நீங்கள் நோ்மையுடனும் அா்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.