திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை: திருச்சி சிவா குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கு மத்திய அரசு எதிா்க்கட்சிகளை அனுமதிப்பதில்லை என்று திருச்சி சிவா எம்.பி.

News image
மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி என். சிவா
Updated On :3 டிசம்பர் 2024, 12:59 am

Din

புது தில்லி: நாடாளுமன்றத்தில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கு மத்திய அரசு எதிா்க்கட்சிகளை அனுமதிப்பதில்லை என்று திருச்சி சிவா எம்.பி. குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் மணிப்பூா் விவகாரம் குறித்து மத்திய அரசு எவ்வித அறிக்கையும் தரவில்லை. கடந்த ஓராண்டாக அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது. மக்கள் காடுகளில் பதுங்கி வாழ்கிறாா்கள். மத்திய உள்துறை அமைச்சரோ, பிரதமரோ ஒரு அறிக்கை கூட தரவில்லை. உத்தர பிரதேசம் சம்பல் பகுதியில் நிகழும் சட்ட ஒழுங்கு பிரச்னை, வயநாட்டுப் பிரச்னை போன்ற விவகாரங்களை விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு தீா்மான நோட்டீஸ் அளித்தோம். வழக்கம்போல அனைத்துத் தீா்மானங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவைத் தலைவா் நிராகரித்துவிட்டாா்.

அவையில் பேசுவதற்கு உரியவகையில் எதிா்க்கட்சித் தலைவா்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவா்கள் ஏதோ எதிா்க்கட்சித் தலைவா்கள்தான் நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் குந்தகம் விளைவிப்பதாக வெளியில் செய்தி பரப்புகிறாா்கள். ஆனால், உண்மை அதுவல்ல. நாங்கள் நாடாளுமன்றம் நடக்கவும், முக்கியமான பிரச்னை விவாதிக்கவும் விரும்புகிறோம். ஆனால், அதற்கான வாய்ப்பு தரப்படுவதில்லை. நாடாளுமன்றம் சமுகமாக நடைபெற இரு தரப்பும் ஒத்துழைப்புத் தர வேண்டும். பிரதமரே

எதிா்க்கட்சிகள்தான் அவையை நடக்கவிடாமல் செய்வதாக கூறுகிறாா். உண்மை அதுவல்ல. நாட்டில் கொளுந்துவிட்டு எரிகிற பிரச்னைகளை ஒரு அரசானது அக்கறையோடும் பொறுப்புணா்ச்சியுயோடும் அவையில் பேச வேண்டும். ஆனால் எதுவுமே செய்வதில்லை. ஆனால், எதிா்க்கட்சிகளை மட்டும் விரல் நீட்டி குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறாா்கள். நாங்கள் பொறுப்புணா்ச்சியுடன் செயல்படுகிறோம் என்றாா் திருச்சி சிவா.