பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கேரளத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை!

கேரளத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

News image
- PTI
Updated On :3 டிசம்பர் 2024, 9:23 am

DIN

கேரளத்தின் வட மாவட்டங்களில் இன்று(டிச .3) கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகா்ந்து கேரளத்துக்கும் கா்நாடகத்துக்கும் இடைப்பட்ட அரபிக்கடலை இன்று(டிச .3) அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தை உலுக்கிவிட்டு வலுவிழந்த ஃபென்ஜால் புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகா்ந்து அரபிக்கடலை செவ்வாய்க்கிழமை அடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக கேரளத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘சிவப்பு எச்சரிகையும்’, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ’ஆரஞ்ச் எச்சரிக்கையும்’ விடப்பட்டுள்ளது.

மலைப்பிரதேசங்களான மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள் எச்சரிக்கையும்’ விடப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேற்கு நோக்கி நகரும் போது, கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.