ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

சந்திரபாபு நாயுடுவை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம்...

News image
Updated On :4 டிசம்பர் 2024, 3:07 pm

DIN

அமராவதி : சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர பிரதேச காவல்துறையின் சிஐடி பிரிவு கூடுதல் தலைவர்(ஏடிஜிபி) பொறுப்பிலிருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி என். சஞ்சய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் சிஐடி தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி என். சஞ்சய் பதவி வகித்தபோது, அரசியல் தலைவர்கள் உள்பட செல்வாக்குமிக்க நபர்கள் பலர் மீதான வழக்குகளை விசாரணை மேற்கொண்டவர். அந்த வகையில், மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், ஆந்திர பிரதேசத்தின் இப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை என். சஞ்சய் தலைமையில் நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், சிஐடி அதிகாரிகளால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி என். சஞ்சய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச அமலாக்க மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணையில், என். சஞ்சய் மாநில பேரிடர் மற்றும் தீயணைப்பு துறை தலைவராக இருந்த போது, ரூ. 1 கோடி அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. தலைமைப் பொறுப்பில் அவர் இருந்த காலத்தில், மேற்கண்ட துறைக்கான இணையதள பக்கம் வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்காக விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக ஆந்திர பிரதேச அமலாக்க மற்றும் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், தனியார் நிறுவனம் ஒன்று சார்பில் நடத்தப்பட்ட பட்டியலினப் பிரிவினருக்கான விழிப்புணர்வு நிகழ்சிக்காக அவர் ரூ. 1 கோடிக்கும் மேல் வழங்கியதாகவும், ஆனால் மேற்கண்ட தனியார் நிறுவனம் பெயரில் ஹைதராபத்தில் எந்தவொரு நிறுவனமும் செயல்படவில்லை என்பதும் தெரிய வந்திருப்பதாக விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளைத் தொடர்ந்து, என். சஞ்சய்யை பணியிடை நீக்கம் செய்ய ஆந்திர பிரதேச தலைமைச் செயலர் நீரப் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆணையில், என். சஞ்சய் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.