
வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (டிச. 4) இந்திய பங்குச் சந்தை வணிகம் சற்று ஏற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகளும் நிஃப்டி பெரிதாக மாற்றமின்றி 10 புள்ளிகளுடனும் ஏற்றம் கண்டன.
வங்கி மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இதில் ரியாலிட்டி, மீடியா துறை பங்குகள் 0.5 சதவீதமும், பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 2 சதவீதம் வரையும் உயர்ந்திருந்தன.
பங்குச் சந்தையில் 2,307 பங்குகள் ஏற்றத்துடனும், 1,507 பங்குகள் சரிவுடனும் இருந்தது. 95 பங்குகள் மாற்றமின்றி இருந்தன.
15 நிறுவனப் பங்குகள் ஏற்றம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 110.58 புள்ளிகள் உயர்ந்து 80,956.33 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.14 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.30 புள்ளிகள் உயர்ந்து 24,467.45 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.042 சதவீதம் உயர்வாகும்.
வணிக நேரத் தொடக்கத்தில் 81,036 புள்ளிகளுடன் இருந்த சென்செக்ஸ், அதிகபட்சமாக
80,630.53 புள்ளிகள் வரை சரிந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 81,245.39 என்ற இன்றைய அதிகபட்ச உயர்வையும் எட்டியது. முடிவில் 110.58 புள்ளிகள் உயர்ந்து 80,956.33 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 15 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடனும் எஞ்சிய 15 நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக எச்.டி.எஃப்.சி. வங்கி 1.86%, என்டிபிசி 1.45%, பஜாஜ் ஃபின்சர்வ் 1.31%, டிசிஎஸ் 1.21%, பஜாஜ் ஃபின்சர்வ் 0.97%, டைட்டன் கம்பெனி 0.96%, எஸ்பிஐ 0.68%, ஐசிஐசிஐ வங்கி 0.59%, டெக் மஹிந்திரா 0.58%, கோட்டாக் வங்கி 0.44% உயர்ந்திருந்தன.
இதேபோன்று அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் -2.25% சரிந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் -1.65%, அதானி போர்ட்ஸ் -1.49%, பவர் கிரிட் -1.40%, மாருதி சுசூகி -1.33%, ஐடிசி -1.16% சரிந்திருந்தன.
நிஃப்டி நிலவரம்
தொடக்கத்தில் 24,488.75 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 24,366.30 புள்ளிகள் வரை சரிந்தது. பிற்பாதியில் 24,573.20 என்ற இன்றைய உச்சத்தையும் பதிவு செய்தது. வணிக நேர முடிவில் பெரிய மாற்றமின்றி 10.30 புள்ளிகள் உயர்ந்து 24,467.45 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் எச்.இ.ஜி., 16.20%, கே.இ.சி., 13.40%, ஸ்வான் எனர்ஜி 12.40%, யூகோ வங்கி 11.70%, ஐஓபி 8.31%, சென்ட்ரல் வங்கி 7.57%, ஆர்பிஎல் 6.57% உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்திருந்தன.
இதேபோன்று அதானி கிரீன், ஈஸி ட்ரிப் பிளானர்ஸ், விஐபி, பல்ராம்பூர் சினி, வேதாந்த் ஃபேஷன்ஸ் அதானி கேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருந்தன.
வங்கி மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இதில் ரியாலிட்டி, மீடியா துறை பங்குகள் 0.5 சதவீதமும், பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 2 சதவீதம் வரையும் உயர்ந்திருந்தன. நுகர்வு பொருட்கள் துறை, மெட்டல், ஆட்டோ துறைகள் சரிவைச் சந்தித்தன.
இதையும் படிக்க | எச்சரிக்கை! அதிக ஆபத்து நிறைந்தது பாட்டில் குடிநீர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.