ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க அழுத்தம்! கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு...

News image
அரவிந்த் கேஜரிவால்- ANI
Updated On :4 டிசம்பர் 2024, 11:59 am

DIN

தில்லி முதல்வராக இருந்தபோது, மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன.

இந்த கூட்டத்தில் அதானி தொடர்புடைய குற்றச்சாட்டை முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை முன்வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேஜரிவால் பேசியதாவது:

“நான் முதல்வராக இருந்தபோது, தில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானிக்கு ஒப்படைக்க அழுத்தம் கொடுத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். சிறைக்கு சென்றதற்கு அதுவும் காரணமாக இருக்கக்கூடும் என்று நான் எண்ணினேன்.

ஆட்சிக்கு வந்தால் அதானிக்கு மின் உற்பத்தி நிலையங்களை கொடுக்க மாட்டோம் என்று பாஜக அறிவிக்க வேண்டும் என்று நான் சவால் விடுகிறேன்.

தில்லியில் பெருமளவில் வாக்குகளை குறைக்கும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள்கள் காத்திருங்கள். நான் அவர்களை அம்பலப்படுத்துகிறேன்.

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் பாஜக எப்படி வெற்றி பெற்றது என்பதை நாட்டு மக்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் நேர்மையாக தேர்தலில் வெற்றி பெறவில்லை” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே, நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.