ராகுல், பிரியங்கா இன்று சம்பல் செல்கிறார்கள்!
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் பகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இன்று ஆய்வுசெய்யவுள்ளனர்.


வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் பகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இன்று(டிச.4) ஆய்வுசெய்யவுள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் பிற எம்.பி.க்கள் உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வன்முறை நடந்த இடத்தில் புதன்கிழமை ஆய்வு செய்யவுள்ளனர்.
வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இன்று ஆய்வுசெய்யவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 19ஆம் தேதி மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பலில் பதற்றம் நிலவியது.
ஞாயிற்றுக்கிழமை, மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி, ஆய்வுக் குழு மீண்டும் பணியைத் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா புலந்த்ஷாஹர், அம்ரோஹா, காசியாபாத் மற்றும் கௌதம் புத்த நகர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களின் அதிகாரிகளிடம், ராகுல் காந்தியை சம்பாலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும்படி கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா கூறுகையில், “நவம்பர் 24 அன்று வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி சூடு, கல்வீச்சு மற்றும் தீவைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதன் விளைவாக, சம்பல் மாவட்டத்தில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி வரை, எந்தவொரு வெளி நபர்களும், சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர் சம்பல் மாவட்டத்திற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், பிஎன்எஸ் 2023 இன் பிரிவு 163 இன் கீழ் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...