ஒடிசாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்காக காத்திருப்பு

ஒடிசாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

ஒடிசாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் எம்எல்ஏ சாரதா பிரசாத் நாயக்கிற்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சம்பத் சந்திர ஸ்வைன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2019-20 மற்றும் 2023-24 க்கு இடையில் 12,13,924 இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு!

அதில், 3.19 லட்சம் பட்டதாரிகள், 51,956 முதுகலை பட்டதாரிகள், 42,916 டிப்ளமோ, 74,827 ஆசிரியர்கள், 33,691 ஐடிஐ உள்ளிட்டவை பயின்றவர்கள் ஆவர். மேலும் 836 மருத்துவ முதுகலை பட்டதாரிகள், இரண்டு மருத்துவ பட்டதாரிகளும் மாநிலத்தில் வேலைக்காக காத்திருக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்த 2,274 பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது.

மற்றொரு எழுத்துப்பூர்வ அறிக்கையில், மாநில அரசு 2019-20 முதல் 2023-24 வரை வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தின் மூலம் 36,329 இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 15,068 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2014-15 முதல் 2023-24 வரை முதல்வரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18.42 லட்சம் இளைஞர்கள் சுயதொழில் செய்யக்கூடியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com