விவசாயிகள் பேரணி தற்காலிக நிறுத்தம்!

தில்லி நோக்கிச் சென்ற விவசாயிகளின் பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எல்லையில் தடுத்து நிறுத்தப்படும் விவசாயிகள்
எல்லையில் தடுத்து நிறுத்தப்படும் விவசாயிகள்PTI
Published on
Updated on
1 min read

தில்லி நோக்கிச் சென்ற விவசாயிகளின் பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியதில், விவசாயிகள் பலர் காயமடைந்துள்ளதால், பேரணியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் சா்வான் சிங் பாந்தா் தெரிவித்தார்.

வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதியான ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 101 போ் தில்லியை நோக்கி பேரணியாக சென்றபோது அவா்களை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா். இதில் விவசாயிகள் சிலர் காயமடைந்ததால், பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

பேரணி தற்காலிக நிறுத்தம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், ஞாயிற்றுக்கிழமையான இன்று தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஷம்பு எல்லையில், காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளைத் தடுத்தனர்.

இதில், விவசாயிகள் பலர் காயமடைந்ததால், பேரணியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவா் சா்வான் சிங் பாந்தா் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, ''இன்று எங்கள் பேரணியை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் போராட்டம் நாளை தொடரும். விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 8 - 9 விவசாயிகள் காயமடைந்துள்ளனர். இதனால் எங்கள் பேரணியை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம். எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரைவில் தெரிவிப்போம்'' எனக் கூறினார்.

ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிய காவல் துறையினர், சிறிது நேரத்தில் விவசாயிகள் மீது பூக்களையும் தூவினர்.

விவசாயிகளின் போராட்டத்தை மதிக்கும் பொருட்டும், கோபமடைந்த விவசாயிகளை சாந்தப்படுத்தும் வகையிலும் அவர்கள் மீது பூக்கள் தூவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | விவசாயிகள் மீது காவல்துறை பூ மழை! போராட்டத்தில் சுவாரசியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com